டாடா மோட்டார்ஸ் தனது மார்ச் 2020ன் விற்பனை நிலையை அறிவித்தது, இந்நிறுவனம் கடந்த மாதம் மொத்தம் 11,012 யூனிட்டுகளை விற்றது,இது மார்ச் 2019 இல் விற்கப்பட்ட 68,727 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது 84 சதவீதம் மிகப் பெரிய சரிவை சந்தித் துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயானது, உற்பத்தியாளர்களின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த தூண்டியது. வாகன உற்பத்தியாளர்களின் பயணிகள் வாகன விற்பனை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 5676 யூனிட்களாக இருந்தது, இது 2019 மார்ச்சில் விற்கப்பட்ட 17,810 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 68 சதவீதம் குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் அதன் பிஎஸ் 4 சரக்குகளில் பெரும்பாலானவற்றை விற்றுவிட்டதாகவும் முன் பதிவு செய்யப்பட்ட பிஸ் 4 ரக வாகனங்கள் மாட்டுக்கும் முடங்கி கிடப்பதாக தெரிவித்துள்ளனர் .
RX 100 தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள். 1. தோல்வியில் இருந்து தோன்றியது இது. தந்து முந்தைய தோல்வி மாடலான RD 350ல் இருந்து புதிதாக மக்களுக்கு ஏற்றார் போல் தரவேண்டும் என்ற எண்ணமே RX 100ன் பிறப்பிடம். 2. "பாக்கெட் ராக்கெட்" தனது அதிவேக ஆற்றலால் அனைவரும் RX 100ஐ "பாக்கெட் ராக்கெட்" என்று செல்லமாக அழைப்பதுண்டு. 3. இதன் சக்ஸஸார் ஒரு பெரிய தோல்வி. RX 100ன் அதிபயங்கர வெற்றிக்கு பிறகு யமஹா நிறுவனம் எடுத்த முடிவு தான் RX 135. இது ஏனோ RX 100ன் வெற்றிக்கு முன்னாள் தாக்குப்புடிக்க முடியவில்லை. மக்களாலும் பெரிதும் பேசப்படவும் இல்லை. 4. சினிமா பைக் இதன் காலகட்டம் முதல் நிறைய புது பைக்குகள் போட்டி போடும் இந்த காலம் வரை சினிமாவில் ஓர் தனி இடம் பிடித்து அதிகமாக திரைப்படங்களில் உபயோகித்த வண்டி என்ற பெருமையை பெற்று இருக்கிறது. 5. அதிக சோதனைக்கு உள்ளான பைக். இதன் திறன் மீது அதிக சந்தேகம் இருந்த பலரும் இதை விதைக்கொடுத்து வாங்கி இதன் இன்ஜின் மற்றும் இதர பாகங்களை சோதனை செய்துள்ளனர்.
Comments
Post a Comment