டாடா மோட்டார்ஸ் தனது மார்ச் 2020ன் விற்பனை நிலையை அறிவித்தது, இந்நிறுவனம் கடந்த மாதம் மொத்தம் 11,012 யூனிட்டுகளை விற்றது, இது மார்ச் 2019 இல் விற்கப்பட்ட 68,727 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது 84 சதவீதம் மிகப் பெரிய சரிவை சந்தித் துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயானது, உற்பத்தியாளர்களின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த தூண்டியது. வாகன உற்பத்தியாளர்களின் பயணிகள் வாகன விற்பனை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 5676 யூனிட்களாக இருந்தது, இது 2019 மார்ச்சில் விற்கப்பட்ட 17,810 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 68 சதவீதம் குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் அதன் பிஎஸ் 4 சரக்குகளில் பெரும்பாலானவற்றை விற்றுவிட்டதாகவும் முன் பதிவு செய்யப்பட்ட பிஸ் 4 ரக வாகனங்கள் மாட்டுக்கும் முடங்கி கிடப்பதாக தெரிவித்துள்ளனர் .
Comments
Post a Comment