credits : Google |
டிவிஎஸ் நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் என்றும் தனித்துவமாய், ஆபத்தையும் அலசிப்பார்க்கும் ஒரு நிறுவனமாய் இருசக்கர வாகன களத்தில் நிற்கிறது. தனது சக்ஸஸ் லைன்அப்-ஆன அப்பாச்சி பைக்கை BMW நிறுவனத்தோடு இனைந்து அப்பாச்சி RR 310 என்ற ஓர் அசுரனை இருசக்கர சந்தையில் வெளியிட்டது.
credits : Google |
இந்த ரக காம்பெடிட்டர்களுக்கு சவாலாக இருந்தது. இருப்புனும் அதிகமாக இதை சாலைகளில் பார்க்க முடியவில்லை என்றாலும் இந்த முயற்சியாகவே TVS நிறுவனத்தை பாராட்டலாம். இப்போதும் TVS நிறுவனம் ஒரு புது முயற்சியில் ஈடுபட்டு தனது நிறுவனத்தை விரிவு படுத்தி புது நிறுவனத்தை விலைக்கு வாங்கி உள்ளது.
யுனைடெட் கிங்டமில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனம் "Norton". இந்நிறுவனம் கிளாசிக் ரக பைக்குகளை தயாரிப்பதில் புகழ்பெற்ற நிறுவனம் ஆகும். இந்நிலையில் கடந்த சில காலமாக இந்நிறுவனம் சர்வ இயங்கவில்லை என்பதாலும் புதிய புக்கிங்களுக்கு வண்டிகளை தயாரிக்க முடியாமலும் இருந்தது.
credits : Google |
இதையடுத்து Norton நிறுவனம் தனது பெரும் பகுதி பங்குகளை விற்க முன்வந்தது. அந்த பங்குகளை தான் TVS நிறுவனம் RS.153 கோடிக்கு வாங்கி உள்ளது.
இதை பற்றி TVS நிறுவனத்தின் நிருவாக இயக்குனர் கூறுகையில், Norton நிறுவனம் பழையபடி இயங்க TVS நிறுவனம் ஒத்துழைக்கும் எனவும், Norton நிறுவனத்தின் எந்த ஒரு செய்யப்பாடுகளும் மாற்றப்படாது எனவும், மீண்டும் புதிய பொலிவுடன் Norton தந்து வேலைகளை தொடரும் எனவும் தெரிவித்துள்ளர்.
Comments
Post a Comment